பசியின் பதிவுகள் (கவிதை)

வரவேற்பறை
அலங்கரிப்புக்கு
வண்ண வண்ண
ஓவியங்களுக்குப்பதில்
*
சோமாலியாக் குழந்தைகளின்
கண்களில்
நிரம்பித் ததும்பும்
சோகங்களை
*
எண்ணிவிடுகிற
நெஞ்செலும்புகளை
அவற்றுக்குக்கீழே
குழிந்து போன
வயிறுகளை
*
உயிரின் வாதைகளை
பசியின் பதிவுகளை
பத்திரிக்கை நறுக்குகளை
செவ்வகச்சட்டங்களில் ஏற்றி
சுவற்றில் மாட்டினால் என்ன
எனத்தோன்றுகிறது
*
அவை
என்றேனும் ஒருநாள்
நெஞ்சில் ஆணியறைந்து
நினைவைக் குடைந்து
இதயத்திலிருந்து
வற்றிப்போகாத
ஈரக்கசிவை
ஏற்படுத்தக்கூடும்
குறிப்பு: இந்தக் கவிதை இன்று தமிழ்முரசு இதழில் (2-Mar-2008) வெளிவந்துள்ளது.
அலங்கரிப்புக்கு
வண்ண வண்ண
ஓவியங்களுக்குப்பதில்
*
சோமாலியாக் குழந்தைகளின்
கண்களில்
நிரம்பித் ததும்பும்
சோகங்களை
*
எண்ணிவிடுகிற
நெஞ்செலும்புகளை
அவற்றுக்குக்கீழே
குழிந்து போன
வயிறுகளை
*
உயிரின் வாதைகளை
பசியின் பதிவுகளை
பத்திரிக்கை நறுக்குகளை
செவ்வகச்சட்டங்களில் ஏற்றி
சுவற்றில் மாட்டினால் என்ன
எனத்தோன்றுகிறது
*
அவை
என்றேனும் ஒருநாள்
நெஞ்சில் ஆணியறைந்து
நினைவைக் குடைந்து
இதயத்திலிருந்து
வற்றிப்போகாத
ஈரக்கசிவை
ஏற்படுத்தக்கூடும்
குறிப்பு: இந்தக் கவிதை இன்று தமிழ்முரசு இதழில் (2-Mar-2008) வெளிவந்துள்ளது.
Labels: கவிதை
3 Comments:
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the MP3 e MP4, I hope you enjoy. The address is http://mp3-mp4-brasil.blogspot.com. A hug.
நல்ல கவிதை என்பதைவிட மனதைத் தைக்கும் கவிதை. குற்ற உணர்ச்சியுடன் மிகவும் சிந்திக்க வைத்தது.
அனுஜன்யா
உங்கள் கவிதையைப் படிக்கும் போது ஈழத்தில் அரைப்பட்டினி யாக உள்ள தமிழரின் ஞாபகம்
வருகிறது.
செம்மதி
Post a Comment
<< Home