Sunday, October 18, 2009

புத்தாடைகள் என்ன செய்யும்?

இது ஆயத்த ஆடைகளின் காலம்.

துணியெடுத்து
வெட்டித் தைக்கும் வரை
காத்திருப்பதில்லை
அவசர வாழ்க்கை!

புத்தாடைகள்
எல்லோருக்கும்
அமைந்து விடுவதில்லை!

கொஞ்சம்
பெரிதாகவோ
சற்று உடம்பை
பிடித்துக்கொண்டோ
அமைந்து போனாலும்

ஒரு சிலர்
ஒன்றும் சொல்லாமல்
கிழியும் வரையும்
உடுத்தி விடுகிறோம்!

இன்னும் சிலர்
ஒருமுறை மட்டும்
உடுத்திவிட்டுப் பின்
உதறி விடுகிறோம்!

சிலர் ஆடைகளையும்
சிலர் தங்களையும்
மாற்றிக்கொள்கிறார்கள்!

ஆடைகளைக் கைகாட்டும்
நாம்தான் தெரிவு செய்தோம்!

புத்தாடைகள்
பொருந்தாமற்
போவதற்கு
பாவம்
ஆடைகள் என்ன செய்யும்? - இல்லை
கண்ணாடிகள்தான் என்ன செய்யும்?!

குறிப்பு: நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவு போட ஆசை. குறியீட்டுக்கவிதை இங்கு பதிவாகிறது. உங்கள் கருத்தைச் சொல்லி உற்சாகமூட்டுங்கள், தொடர்ந்து நிறையப்பதிவுகள் போடலாம். வலை உலகத்திலே வலம் வரலாம். நன்றி - அன்புடன் வயிரவன்

Labels: , ,

2 Comments:

At 8:44 PM, Blogger தமிழ் said...

நன்றாக இருக்கிறது
நீண்ட நாளுக்குப் பிறகு தங்களின்
கவிதையை வலைப்பதிவில் பார்ப்பதில் மகிழ்ச்சி

தமிழ் முரசில் தங்களின் கவிதையைப் படித்தது உண்டு

அன்புடன்
திகழ்

 
At 9:09 PM, Blogger அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க... தொடருங்க.

 

Post a Comment

<< Home