அக(ல்) விளக்கேற்றுங்கள்
அகல் விளக்கே
அக விளக்காக
ஆக விருப்பமா?
இருள் விலக்கும்
புற விளக்குகளே
இத் தீபத்திருநாளில்
அகத்துக்குள்
விளக்கேற்ற
அழைக்கின்றேன்
உங்களை!
கண்களை மூடி
நெஞ்சுக்குள்
விளக்கேற்றி
நெடும்பயணம் போக
நெடுநாளாய் விருப்பம்
உங்கள் வெளிச்சத்தில்
என்னை யார்? என்று
எனக்குக் காட்டுங்கள்!
- தீபாவளிக்கு 2 நாள் முன்னர் (20-அக்டோபர்-2006) எழுதியது.
3 Comments:
//அகல் விளக்கே
அக விளக்காக
ஆக விருப்பமா?//
நல்ல வரிகள் வைரவன் அவர்களே! இல்லக விளக்கு என்று தானே சமயக் குரவரும் பாடுகிறார்? தீபாவளி வாழ்த்துக்கள்!
'அகல் தீபம்' மட்டும் அல்லாது 'அகத் தீபங்களும்' ஏற்றி வைப்போம் வாருங்கள், இந்த நன்னாளில்! என்று இதே சிந்தனையை எழுதி உள்ளேன்!
முடிந்தால் பாருங்கள்! இதோ சுட்டி:
http://madhavipanthal.blogspot.com/2006/10/blog-post_21.html
நன்றி கண்ணபிரான். உங்கள் கட்டுரை படித்தேன். படி தேன் குடித்தேன். நல்ல சிந்தனை மட்டுமல்ல. நல்ல செயலும் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ராம. வயிரவன்.
நன்றி சித. நாச்சியப்பன் அவர்களே.
Post a Comment
<< Home