அழ(ல)குத்திருவிழா
சிறப்பாக ஒரு விழா!
சிங்கைத் தைப்பூசத் திருவிழா!
இது சிலிர்ப்பான ஒரு உலா!
பால்குடங்கள்
காவடிகள்
சந்தன மொட்டைகள் தாண்டி
இனம்
மொழி
மதம் தாண்டி
தைப்பூசம் தந்ததென்ன?
ஆயிரமாயிரம் பேர்
அலகு குத்தினர்
வலியை மறந்தனர்
உண்ர்ந்து பார்த்தனர்
ஆடிப் பாடினர்
கூடிக் கொண்டாடினர்
ஆயிரமாயிரம் பேர்
கண்டு மகிழ்ந்தனர்
உண்டு மகிழ்ந்தனர்
பேசி இருந்தனர்
சேவைகள் புரிந்தனர்
பலப்பலவாய்
அனுபவங்களைப்
பலருக்கும் தந்து
பயன் தந்ததே
இப்பூசத் திருவிழா!
நேற்றைப் போல இன்றும்
இன்றைப் போல நாளையுமாகத்
தடம் மாறாமல் வாழ்க்கை
ஒரே மாதிரியாய்
ஓடிக்கொண்டிருக்கையில்
அனுபவங்களைப்
பயிற்சிகளை
அள்ளித்தந்ததே
இந்த அழ(ல)குத்திருவிழா!
குறிப்பு: இன்று (04-feb-2007) சிங்கப்பூர் தமிழ்முரசில் வெளிவந்துள்ளது.
Labels: கவிதை
0 Comments:
Post a Comment
<< Home