Wednesday, January 03, 2007

தாழ்வுமனப்பான்மை

தாழ்வுமனப்பான்மை
உன் தலைபிடித்து தண்ணிக்குள் மூழ்கடிக்கும்!
ஏழ்மை உன் கால்பிடித்து உள்ளே இழுக்கும்!
உணர்வுகள் என்னும் காற்றுப்பை உன்னை மேலே கொண்டுவரும்!
ஆகவே மனமே
‘அடுத்தவன் நம்மை மதிக்கின்றானா’ என்பதிலேயே
ஆயுளைக் கழிக்காதே!
தராசுத்தட்டைக் கையிலெடுத்து தலைகளை நிறுத்து
ஆராய்ந்து அலையாதே!
உண்மை பேசும் உணர்வுகள் இருக்க, ஊகம் செய்து
உளன்று போகாதே!
வார்த்தைகள் அளந்து வரும் துன்பத்தில் மூழ்கி
வருந்திச் சாகாதே!
உணர்வைப் புரிந்து உணர்வைப்பேசி
உணர்வை வாழ்ந்துவிடு!

எடைபோட்டுப் பார்க்கும்
இயந்திர மூளையின் இயக்கம் நிறுத்திவிடு!

நல்லதோ கெட்டதோ உணர்வின் வழியே
உன்னைச் செலுத்திவிடு!

முடிந்து போனதை மூளைக்குள் போட்டு
மீண்டும் வருந்தாதே!

நாளை வருவதை இன்றே நினைத்து
நடுங்கிச் சாகாதே!

நிகழ்வைப்பேசி நிகழ்வைச்சிரித்து
நிகழ்வை வாழ்ந்துபடி!

1 Comments:

At 9:25 AM, Blogger கோபிநாத் said...

அன்பு வயிரவன்,
உணர்ச்சி மிக்க கவிதை...அருமையாக உள்ளது

\உணர்வைப் புரிந்து உணர்வைப்பேசி
உணர்வை வாழ்ந்துவிடு!\\

உண்மையான வார்த்தைகள். பாரட்டுக்கள்

 

Post a Comment

<< Home