Sunday, December 31, 2006

வருகிறது 2007 !வரவேற்போம் தீர்மாணத்தோடு!

வருகிறது 2007 !
வரவேற்போம் தீர்மாணத்தோடு!

விதவிதமா
விளக்கேத்தி
பலூன் கட்டி
பனித்தூவி
கூட்டங்கூடி
பாட்டுப்பாடி
ஆட்டமாடி
கைகுலுக்கி
கவுண்ட்டவுன் சொல்லி
வருகிறது 2007! (ஈராயிரத்தேழு!)
வரவேற்போம் தீர்மாணத்தோடு!
சிக்கனமாச் செலவு செஞ்சு
சேமிப்பை (ஏழைகளுக்கு) உதவி செஞ்சு
உறவுக்குக் கைகொடுத்து
ஒத்துமைக்குப்பாடுபட்டு
கட்டினவ கரங்கோத்துக் களித்திருந்து
பிள்ளைகளைக் கொணத்தோட
கல்விதந்து கரையேத்தி
பெத்தவங்க மனமகிழப் பணிவிடைகள்
நித்தம் செஞ்சு
குத்தங்கொறை ஏதுமின்றி
நிம்மதியாக் கழியோணும்!
நிறைவைத் தரவேணும் புத்தாண்டு! என
நெனச்சு வரவேற்போம்!

வருகிறது 2007 !
வரவேற்போம் தீர்மாணத்தோடு!

1 Comments:

At 10:22 AM, Blogger கோபிநாத் said...

அன்பு வயிரவன்

அருமையான தீர்மாணம் அதுவும் கவிதை நடையில்,

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

Post a Comment

<< Home