வெஜிடேரியனிசம்
அவசியம் அனைவரும் படிக்கவேண்டிய சீனுவின் பதிவு இவ்வாறு முடிகிறது!! முழுவதும் படிக்க மேலே உள்ள தலைப்பைச் க்ளிக் செய்யுங்கள்.
------------------------------------------------------
//......
சைவத்தை பற்றி ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கூரும்போது "நம்முடைய உடம்பு இறந்து போன விலங்குகளின் சுடுகாடாக இருக்கும் வரை, இந்த இலட்சிய பூமி எப்படி நலமாக இருக்கும்?" என்கிறார். சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் ஒரு உணவகத்தில் கலைக்கப்பட்ட கருவின் மாமிசம் விற்கப்பட்டன. நம்முடைய உணவு பழக்கத்திற்கும் கர்ம விணைகள் உள்ளன. சீனாவில் 'தயாரிக்கப்பட்டு' உலகையே அச்சுரித்திய சார்ஸ் நோய்க்கு முக்கிய காரணம் அவைகள் புனுகுப் பூனை எனப்படும் காட்டுப் பூனையை உணவாக உட்கொண்டதால் தான். நாம் செய்யும் பாவ செயல்களுக்கு துன்பப்படவேண்டும் என்பது இயற்கையின் மாற்ற முடியாத விதி. இதைத் தான் நியூட்டனின் மூன்றாவது விதி! இந்த உலகின் ஒவ்வொரு உயிரும், எரும்பாக இருந்தாலும் அல்லது எருமையாக இருந்தாலும், அவை பரமாத்மாவின் குழந்தையே. அந்த உயிருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பரமாத்மா மன்னிக்காது. அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.//
நன்றி சீனு!!
Labels: பொதுவானவை
3 Comments:
மொதல்ல எது வெஜிடேரியன்னு ஒரு பார்வை கொடுங்க..
தாவரமும் உயிர்தானே...பசுவின் பாலில் எந்த உயிரும் வாழாதா ? கன்றுக்காக 'பரமாத்மா' கொடுத்த உணவை உறிஞ்சுகிறீர்களே ? அது எந்த வகையில் சேர்த்தி ?
நன்றி ரவி! தாவரமும் உயிர்தான். மரம் வெட்டுவதும் மனிதனை வெட்டுவதற்குச் சமம்தான். கன்றுக்கும் துன்பம் தரக்கூடாதது என்பது சரியே. ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு அடுத்த உயிர்களுக்கு துன்பம் தரக்கூடாது என நினைத்துப்பார்ப்பதே ஒரு நல்ல செயலாகும்.
அந்த நினைப்பு வந்த போதுதான் நான் மாறினேன். "உயிர் தின்று உடல் வளர்ப்பதா" என்று நினைத்தேன். ருசி பிடிக்காமல் நான் சைவமாக வில்லை. சாலையில் நடந்து செல்கிறோம். எத்தனையோ எறும்புகள் மிதிபட்டு சாகின்றன. அதற்காக நடக்காமலே இருக்க முடியுமா? ஒரு வேளை எறும்புகள் சாரையாக ஊர்ந்து செல்வதைப் பார்த்து விட்டால் மிதித்து விடாமல் விலகிச் செல்லலாம். அதுதான் நம்மால் முடிந்த ஒரு கருணை.
நான் கேள்விப்பட்ட செய்திகள்.. சில ஆசிய நாடுகளில் குழந்தைக்கறி கிடைக்கும் ஹோட்டல்கள் இருக்கிறதாம். இன்னும் சில நாடுகளில் உயிரோடு பறவைகளை சூடான கல்லின் மீது விட, அவைகள் சூடு தாங்காமல் குதிக்க கால்களில் இரத்த ஓட்டம் அதிகமாகும் போது அந்தக்கால்களை உடனே வெட்டி சமைத்தால் மிக ருசியாக இருக்குமாம். இது அந்த நாட்டின் மிக உயரிய அரச உணவாம்.
பாருங்கள் எப்படியெல்லாம் நடக்கிறது?
//மொதல்ல எது வெஜிடேரியன்னு ஒரு பார்வை கொடுங்க..
தாவரமும் உயிர்தானே...பசுவின் பாலில் எந்த உயிரும் வாழாதா ? கன்றுக்காக 'பரமாத்மா' கொடுத்த உணவை உறிஞ்சுகிறீர்களே ? அது எந்த வகையில் சேர்த்தி ?
//
ரவி,
எனக்கு தெரிந்து சைவத்துக்கும் அசைவத்துக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரிணத்திற்கும் மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous System) உள்ளது. இந்த மண்டலம் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. வலி என்றால் என்ன என்று இந்த மண்டலம் தான் ஒவ்வொரு உயிர்க்கும் உணர்த்துகின்றது. ஆடு, மாடு, கோழி, முயல், காடை, பாம்பு, ஏன் மனிதனுக்கும் மற்றும் நம் சாப்பிடும் அனைத்து உயிரினத்திற்கும் இந்த மத்திய நரம்பு மண்டலம் உள்ளது. அதனால் தான் இந்த உயிர்களை வதைக்கும் பொழுதும், கொல்லும் பொழுதும் வலி வந்து இந்த உயிர்கள் துடிக்கின்றது. சரி! நாம் சாப்பிடும் சைவ உணவு வகைகளான அரிசி, பருப்பு, பால், தாவரங்கள், ஏன் தண்ணீர் போன்றவையும் உயிருள்ளவைதானே என்ற கேள்வி எழலாம். அப்பொழுது இந்த உணவு வகைகளும் அசைவம் தானே ஆகின்றது? இல்லை! காரணம் இந்த உயிர்களுக்கு மேலே சொல்லப்பட்ட மத்திய நரம்பு மண்டலம் என்பது இல்லை. அதனால் அவற்றிற்கு வலி தெரியாது. இதுவும் ஒரு அசைவம் தான். ஆனால் நாம் இயற்கைக்கு உட்பட்டு, நமக்கு தரப்பட்டுள்ள எல்லை வரை செல்லலாம்.
Post a Comment
<< Home