Sunday, February 18, 2007

பார்ப்பது கேட்பது உணர்வது கூட. . .

‘நான் ஒரு எறும்பைக் கொன்றேன்
என் பிள்ளைகள் நிசப்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்’

என்றொரு வெளிநாட்டுக் கவிதை படித்தேன்
தொடர்ந்தொரு சிந்தனை தொற்றிக் கொண்டது

நாம் கோபப்படுகிறோம்
நம் பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

நாம் சிவப்பு விளக்கில் சாலை கடக்கிறோம்
நம் பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

நாம் சாலை நடுவில் குப்பை போடுகிறோம்
நம் பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

நாம் சிறு குற்றங்கள் செய்கிறோம்
நம் பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

பிள்ளைகள் மனசு
வெள்ளைக் காகிதம்
பதிந்து கொள்ளும் ஒரு
பச்சை மரம்

மறந்தே போகிறோம்
மரத்தில் பதிகிறோம்
வெள்ளைத்தாளில் கரும்புள்ளிகள்
காட்சியாய்ப் பதியுமன்றோ?

உயர்ந்த லட்சியம்
ஊட்டி வளர்ப்பதை
உணர வில்லையே நாம்!

நாட்டின் தூண்களைக்
கேட்டினைச் செய்யத்
தூண்டுதல் செய்கிறோமே

வன்முறை சினிமா
பிள்ளைகள் கெடுக்கும்
தடுக்க வில்லையே நாம்?

நல்ல கதைகளைச்
சொல்லி வளர்ப்பதைச்
செய்ய வில்லையே நாம்?

உணவில் மட்டும்
சத்துகள் இருப்பின்
உடல்தான் வளருமன்றோ?

பார்ப்பது கேட்பது
உணர்வது கூட
சத்தாய் இருக்கணுமே!

Labels:

1 Comments:

At 10:30 PM, Blogger மாதங்கி said...

எளிய வரிகளில் சிறப்பான கருத்துக்கள். வாழ்த்துக்கள் வைரவன்.

 

Post a Comment

<< Home