Thursday, October 22, 2009

நான் காடுகளையே விரும்புகிறேன்

எனக்குக்
கரிஉமிழும்
நகரங்கள்
பிடிப்பதில்லை
நகரங்களில்
பாதைகள் இருக்கின்றன!
எந்தப்பாதை
எங்கே செல்கிறதென்று
எழுதி வைத்திருக்கிறார்கள்!

காடுகளில்
நாம்தான்
கால்நடையாக
வளைந்தும்
நெளிந்தும்
ஊர்ந்தும்
ஏறியும்
இறங்கியும்
வழி கண்டுபிடிக்க வேண்டும்!
அது இன்பந்தரும்!

நான் காடுகளையே விரும்புகிறேன்
ஏனென்றால்
இலக்கைவிட
பயணம் முக்கியம்
எனக்கு!

‘கொஞ்சம் நில்!
நானும் வந்துவிடுகிறேன்
என்று
நீங்களும் சொல்வீர்கள் சீக்கிரம்!

ஏனென்றால்
இலக்கைவிட
பயணம் முக்கியம்... உங்களுக்கும்!

Labels: , ,

1 Comments:

At 7:30 AM, Anonymous இராம.வயிரவன் said...

குறிப்பு: இந்தக்கவிதை சென்ற ஞாயிறு தமிழ்முரசில் 'கொஞ்சம் நில்' என்கிற தலைப்பில் படத்துடன் வெளிவந்துள்ளது.

 

Post a Comment

<< Home