Tuesday, February 20, 2007

யாராகினும் மனிதன்

தாயோ தாரமோ
தந்தையோ பிள்ளையோ
ஊரோ உறவோ
யாராகினும் மனிதன்
அன்புக்கு ஏங்கிடும் ஆன்மா!

நீ
நினைத்தால்
மயிலிறகால்
மனம் வருடலாம்
ஆதரவாய்ப்பேசி
ஏக்கம் போக்கலாம்
கண்களால்
கைது செய்யலாம்
சிரித்துச்
சிறையெடுக்கலாம்
காது கொடுத்துக்
கவலை தீர்க்கலாம்
கண்டு
கொள்ளாமலும்
இருந்து விடலாம்
தள்ளி
வைத்தும்
தண்டனை தரலாம்

என்ன செய்யப்போகிறாய் நீ?

ஒரு சொல் போதும்
சில்லுகளாய் உடைத்துப்போட

ஒரு பார்வை போதும்
அன்பால் கட்டிப்போட

ஒன்றும் செய்யாதிருந்தால் போதும்
உணர்வுகளைக் கொன்றுபோட

என்ன செய்யப்போகிறாய் நீ?

குறைந்த பட்சம்
செலவில்லாமல் புன்சிரித்து
வரவு வைத்துக்கொள் உன் கணக்கில்!

Labels:

2 Comments:

At 6:47 PM, Blogger மங்கை said...

பெண்ணியத்தை பற்றிய சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது..ஹ்ம்ம்

அவளிடமும் மனிதம் தேடி கண்டுபிடித்து அதை திருப்பி கொடுத்தால் போதுமே...

நல்லா இருக்கு வைரவன்

 
At 5:37 PM, Blogger இராம. வயிரவன் said...

நன்றி மங்கை, எனக்கு பெண்ணியம் ஆணியம் என்பதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இருபாலரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

 

Post a Comment

<< Home