இப்படியாக உலகம் . . .
நிழல்களும் நிஜங்களுமாக
பின்னிக்கொண்டு உலகம்!
சூழலே சூல் கொள்வதால்
நிஜங்களும் நிழல் விழுங்கியே இருக்கின்றன!
நிழல்களின் தாறுமாறான
உளித்தாக்குதல்களில்
கரடுமுரடாக
உருவாக்கப்படுகிறான் மனிதன்!
நிழல்கள் பிருமாண்டமாகி
மனிதனை மொத்தமாக
வாரிச்சுருட்டி
உள்ளிழுத்துக் கொண்டிருக்கின்றன!
நிழல்கள் பெரிதாகி
மேலும் பெரிதாகி
ஒளிதின்று
இரவாகி விட்டன!
நிழல்கள் நீண்டு பெருத்து
பூதங்களாகி பயம் காட்டுகின்றன!
இப்படியாக
சுற்றிக்கொண்டிருக்கிற
பூமிப்பந்தில்
இலக்கு இல்லாமல்
ஊர்ந்து கொண்டிருக்கிறதுபொய்ப்பயணம்!
Labels: கவிதை
0 Comments:
Post a Comment
<< Home