Sunday, July 18, 2010

Dr சி.கே சந்திரமோகனின் 'மனப்பதிவுகள்' கவிதைத்தொகுப்பு பற்றி

மருத்துவக் கவிஞரின், கவிதைகள் தந்த பக்க விளைவுகள் இதோ.

சிக்கனக் கவிதைகள்; ஆனாலும் சிந்தையில் நிற்கின்றன; வலிக்கின்றன; நெஞ்சைப் பிசைகின்றன; சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

நாலுவரிதான் ‘எலி’ கவிதை.

அந்தக்கவிதை..
‘எலியும் உழைக்கிறது
ஜோஸ்யம் சொல்லி
எம்.ஏ படித்தவனோ
சும்மா வீட்டில்’ - ஏற்படுத்தும் தன்முனைப்புப் பெரியது.

சங்கமம் கவிதையில் வருகிற
‘குப்பைத்தொட்டியில்...
.....
.....
இரண்டு நாய்கள்
மூன்று பன்றிகளுடன்
ஒரு மனிதனும்’ - வரிகள் நெஞ்சைப் பிசைகின்றன.

செல்லப்பனின் யோசனை கவிதையில்

‘....இந்த மசுருத் தொழில விட்டுட்டு
அரசியல்ல குதிச்சாலென்ன...’ - என்கிற நக்கலைப் படித்துச் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.

‘..அந்த வீட்டில் ஜீவனோடு சிரிப்பவை
பூக்கள் மட்டுமே’ -- வைரமுத்துவின் மேற்கோள் படித்து உள்ளே தேடினேன். பூக்களைக் காணவில்லை. எங்கே மறைந்து கொண்டன?

எல்லாப் பக்க விளைவுகளுக்கும் மாத்திரைகளை அனுப்புமாறு கேட்டிருக்கிறேன் மருத்துவரிடம். இவருடைய தொகுப்புக் கிடைத்தால் நீங்களும் படித்துப் பக்கவிளைவுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி.

Labels:

3 Comments:

At 10:10 AM, Blogger அன்புடன் நான் said...

பக்க விளைவு அனைத்தும் “பக்கா” விளைவா இருக்குங்க.... ஆனா நூலின் தலைப்பு, நூலின் ஆசிரியர் பெயர் என்று எந்த தலைப்பும் இல்லையே?
பகிர்வுக்கு நன்றிங்க.

 
At 5:40 PM, Blogger இராம. வயிரவன் said...

நண்பர் கருணா, நீங்க கேட்கிற இரண்டும் தலைப்பிலேயே இருக்கிறதே மீண்டும் எதெற்கென்று விட்டுவிட்டேன். நன்றி- வயிரவன்

 
At 7:20 PM, Blogger அன்புடன் நான் said...

மிக சரிங்க.
நன்றி.

 

Post a Comment

<< Home