கடலில் விழுந்த மனம்
கடலாடப் போனேன்
கடலுள் கழன்று விழுந்தது மனம்!
கரையொதுங்கிக் காத்திருந்தேன் மனமின்றி
என்னைப் போலவே பலரும்
காத்திருந்தார்கள்!
அலையாடிய மனங்கள்
ஆர்ப்பரித்து ஆட்டம் போட்டன
மேலும் கீழுமாய்
இடமும் வலமுமாய்
அலைந்து அலைக்கழிக்கப்பட்டன
இப்படியாய்க் காலம் ஓடியது
புண்பட்டு பண்பட்ட மனங்கள்
ஒருநாள் புதரோரம் கரையொதுங்கின!
பொருத்திக்கொண்டபோது
காதோரம் நரை எட்டிப்பார்த்தது!
பொருத்திக்கொண்டார்கள்
பொருத்திக்கொள்ளக் காத்திருந்தார்கள்
நான் அமைதியாய் நடந்தபோது
என் வாழ்க்கை ஆரம்பமாகியிருந்தது!
1 Comments:
ஐயா..உங்கள் கவிகள் எல்லாம் கண்ணுற்றேன்,,,இந்தக் கவிதை,,ஏனோ எனக்குப்பிடித்துளது.
வாழ்த்துகள்.
காதோரம் நரையொதிங்கியபோது....
...ம்ம்ம்ம்...
நல்ல படிமம்.
Post a Comment
<< Home