சும்மா இருக்கும் நல்லவனே!
சும்மா இருக்கும் நல்லவனே!
நீ சோற்றுக்குப் பாரமடா!
தவறெனத் தெரிந்தும்
தட்டிக்கேட்கா நீயும்கூட
தறுதலைதானடா!
உணர்ச்சிகள் இழந்து
உலவுதல் இந்த
உலகுக்குப் பாரமடா!
சமூகம் என்பது
உன்னையும் சேர்த்தே
உணரப் பாருடா!
சரிசரி என்றே
சகித்துப்போயிட்டா
தவறுகள் பெருகுமடா!
நமக்கேன் வம்பென்று
நழுவிப் போவது
நற்செயல் இல்லையடா!
நீயும் ஒருநாள்
நிம்மதி இழப்பாய்
நினைவில் கொள்ளடா!
குறிப்பு: தமிழ் முரசில் ஜூலை 3, 2005 இதழில் பிரசுரமானது.
3 Comments:
பட்டுக்கோட்டையார் பாடல் போல் உள்ளது...
//சும்மா இருக்கும் நல்லவனே!
நீ சோற்றுக்குப் பாரமடா//
இதை விட எப்படி சொல்வது நழுவிக்கொண்டு செல்லும் நல்லவர்களை
பட்டுக்கோட்டையார் பாடல் போல் உள்ளது...
//சும்மா இருக்கும் நல்லவனே!
நீ சோற்றுக்குப் பாரமடா//
இதை விட எப்படி சொல்வது நழுவிக்கொண்டு செல்லும் நல்லவர்களை
நன்றி, மணி ப்ரகாஷ். நமக்குப் பிடித்தவற்றின் தாக்கம் நம் படைப்புகளிலும் இருக்கும். எனக்கு பட்டுக்கோட்டையாரின் பாடல்களின் மேல் காதல் உண்டு. அவர் பாடல்களில் ஓசை நயம் இருக்கும். ஆனால் இப்போது புதுக்கவிதைகளில் ஓசைநயம் அவ்வளவாக இல்லைதான். ஆனால் உவமைகளை அடுக்கி மொழி அழகைக் கூட்டி இலைமறைகாயாக எழுதுகிறார்கள். அது படிக்கும் வாசகர்களை சிந்தனைக்குள் தள்ளுகிறது. இதைப்பற்றி நான் எழுதிய கவிதை 'கவிதைக்குண்டு' இன்றைய சிங்கப்பூர் தமிழ்முரசு இதழில் வெளி வந்துள்ளது. இன்று வலைப்பதிவும் செய்திருக்கிறேன். படித்துப்பாருங்கள்.
நன்றி, இராம. வயிரவன்.
Post a Comment
<< Home