நியூட்ரானும் எலக்ட்ரானுமா?
‘என் மொழி’
‘என் இனம்’
‘என் குலம்’ என்று
தனித்தனி வட்டங்கள் அமைத்து
வரம்புக்குள்ளேயே வளைய வரும்
வழக்கமானவனே!
இன்னொரு இனத்தோடு
இணக்கமாய் இருப்பதால்
இழப்பது ஒன்றுமில்லையே!
இன்னொரு மொழியைக்
கற்றுக்கொண்டால் நீ
இன்னும் சிறப்பாயே!
பிரிவுகள் யாவும் பிரிப்பதற்கல்ல
வசதிக்காகவும் வள்ர்ச்சிக்காகவும் என்பதை
வளர்த்துக்கொள் உன் மனதில்!
நீயும் நானும் என்ன
நியூட்ரானும் எலக்ட்ரானுமா?
ஒரே வட்டப்பாதையில்
ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்க. . .
உன் வட்டத்தை விட்டு சற்றே விலகு!
அடுத்த அணுவோடு அணுக்கமாய்ப்பழகு!
சினேகமாய்ச் சிரி!
சிறக்கும் நம் பல இன சமுதாயம்!
குறிப்பு: தலைப்பும் வரிகளும் தந்த என் மனைவி கலையரசிக்கு நன்றி.
19 நவம்பர்-2006 தமிழ் முரசு இதழில் வெளியானது. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் 'நீயும் நானும் என்ன நியூட்ரானும் எலக்ட்ரானுமா? . . .'
3 Comments:
//பிரிவுகள் யாவும் பிரிப்பதற்கல்ல
வசதிக்காகவும் வள்ர்ச்சிக்காகவும் என்பதை வளர்த்துக்கொள் உன் மனதில்!//
நல்ல தத்துவம்.
நன்றி நற்கீரன் அவர்களே.
//உன் வட்டத்தை விட்டு சற்றே விலகு!
அடுத்த அணுவோடு அணுக்கமாய்ப்பழகு!
சினேகமாய்ச் சிரி!
சிறக்கும் நம் பல இன சமுதாயம்!//
நான் இரசித்த வரிகள்...
Post a Comment
<< Home