கிழிக்கப்படுகிறது வாழ்க்கை
நாட்காட்டித் தாள்களோடு
நாளும் கிழிக்கப்படுகிறது வாழ்க்கை
இல்லாத ஒன்றுக்கான
தொடர் தேடல்களோடு
சூழ்ச்சிச் சக்கரங்களைச்
சுழற்றிக்கொண்டு
கன்னியம் குறைந்த
கால் வாரல்களோடு
மாய மானை நோக்கிய
அம்பெய்தல்களோடு
கூடிய சுயநலப் பிரக்ஞையோடு
இளைப்பாறளற்ற ஓட்டமாக
ஒத்திகையில்லா நாடகமாக
முன்னிலும் வேகமாக
நகர்கிறது வாழ்க்கை!!
Labels: கவிதை
1 Comments:
மாயையில் சிக்குண்டு மீழும் எண்ணமே
இல்லாத மனிதனால் வேறு என்னதான்
செய்யமுடியும். பாவம்! மனித இனம்!!
மலரட்டும் உங்கள் சிந்தனைப் பூக்கள்.
Post a Comment
<< Home