Tuesday, March 13, 2007

முரண்பாடு

‘நீதான் என் உயிர்’ நேற்று
‘என் உயிரை வாங்காதே’ இன்று

சந்திக்கத் தவங்கிடந்தனர் நேற்று
சந்தி சிரிக்கின்றனர் இன்று

நிலை மறந்தனர் நேற்று
நிலை மாறினர் இன்று

குற்றமாயினும் குற்றமில்லை நேற்று
குற்றமற்றதும் குற்றமானது இன்று

விட்டுக்கொடுத்தனர் நேற்று
விவாதம் புரிந்தனர் இன்று

தேன்மொழிந்தனர் நேற்று
திட்டிக்கொண்டனர் இன்று

ஏன்?

நேற்று காதலர்கள்
இன்று தம்பதியர்

Labels:

0 Comments:

Post a Comment

<< Home