Thursday, August 31, 2006

கவிதை - வெங்காயமே ! வெங்காயமே !

வெங்காயமே! ஓ வெங்காயமே!
உரிக்க உரிக்க சும்மா இருந்து விட்டு
உரித்தவனையே அழவைக்கிறாயே!
உனக்கு மட்டும் ஏன் ஒன்பதுகெச புடவை?
எங்கள் சினிமா நடிகைகளுக்கே சின்ன டவல் போதுமே?!

Tuesday, August 29, 2006

கவிதை - வாழ்க்கை ஒன்றே! அதனால் தமிழ் படிப்போம்!

ஒன்றே அதுவாழ்க்கை! எல்லாம் முடிவதற்குள்
இன்றே சுகிப்போம் தமிழை! – இறைவாநீ
நீர்க்குமிழி வாழ்வதனை நீட்டி அருள்புரிந்து
சீர்மணக்கும் செந்தமிழைத் தா!

கவிதை - தமிழ் தருவது பேரின்பம்

நெஞ்சுக்குள் இன்பப்பூ பூக்கும் சுகமாக!
ம்ஞ்சத்து இன்பமிங்கே மண்டியிடும்! - எம்தமிழ்பா
இன்பத்தின் உச்சியிலே சேர்க்கும்! அதனாலே
இன்றே அனுபவித்துக் காண்.

Sunday, August 27, 2006

கவிதை - குறுக்கீடு

பூங்காவில் நானும் அவளும்
'அன்பே . . '
முடிப்பதற்குள்
முணுமுணுத்தது நோக்கியா!
மன்னிக்கச்சொல்லிவிட்டு
யாரெனப்பார்த்தேன்
அலுவலக அழைப்பு
சீக்கிரம் முடித்துவிட்டு
'நாம் இப்படிப்பேசி வெகு நாட்களாகிறது'
அவள் ஆமோதிப்பதற்குள்
மறுபடியும் 'பீப். . பீப். .!'
குறுந்தகவல் குறுக்கீடு!
அணைத்துவிட்டு
நிமிர்ந்த போது
'கிர்ரிங். . கிர்ரிங்..'
இது அவளுடைய சனியன்!!

Saturday, August 26, 2006

கவிதை - மரங்கள்

மரங்கள்
-----------
மண்ணில் வேர் பரப்பி
மழைக்காதலிக்காக
மணிக்கணக்காக
ஒற்றைக்காலில்
ஒற்றுமையாய்த் தவமிருக்கும்
கானகத்துக் காதலர்கள்!
தவத்திற்குத்தலைவணங்கி
தானிறங்கி வந்தமழை
ஆரத்தழுவிவிட்டு
அப்புறம் வருவதாக
அச்சாரம் போட்டுவிட்டு
ஓடிஒளிந்து கொள்ள,
இலைக்கண்களில்
கண்ணீரைச்
சொட்டிவிட்டு,
மனம் ஒடிந்து
போய்விடாமல்
மறுபடியும் தவமிருக்கும்
மாண்புமிகு தாவரங்கள்!

Broaden your M I N D as big as the Universe!!!

"என்மதம்! என்இனம்! என்மொழி! என்னாடு!" எனும் மானுடா
"என்உலகம்! என்உயிர்கள்!!"- எனச்சிந்தி!
எல்லாம் மாறிவிடும்! ஏற்றம் நிகழ்ந்து விடும்!!